Marriage: மனம் திறந்த நக்மா!

Advertisements

திருமணம் செய்து கொண்டால் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பேன். மகிழ்ச்சி என்பது வாழ்க்கையில் ஒரு குறுகிய காலத்திற்கு மட்டுமல்ல,” என உணர்வுபூர்வமாய் நடிகை நக்மா பேசியுள்ளார்…

ஷங்கர் இயக்கத்தில் பிரபுதேவா ஜோடியாக 1994ல் வெளிவந்த ‘காதலன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் நக்மா. அதற்கு முன்பாகப் பத்துக்கும் மேற்பட்ட ஹிந்திப் படங்களிலும், தெலுங்குப் படங்களிலும் நடித்துவிட்டார்.

‘காதலன்’ படத்திற்குப் பிறகு ரஜினிகாந்த் ஜோடியகா நடித்த ‘பாட்ஷா’ படம் அவருக்குப் பெரும் வரவேற்பைப் பெற்றுத் தந்தது. தொடர்ந்து தமிழில் பல முன்னணி நடிகர்கள் ஜோடியாக நடித்தார். பின்னர் போஜ்புரி மொழியில் அறிமுகமாகி அங்கும் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தார். 2008ம் ஆண்டுக்குப் பிறகு சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டார் நக்மா.

48 வயதான நக்மா இதுவரை திருமணம் செய்து கொள்ளவில்லை. ஆனால், அவரது தங்கைகளான ஜோதிகா, ரோஷினி ஆகியோர் திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டனர். இதுவரை திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பது பற்றிச் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியுள்ளார் நக்மா.

“எனக்குத் திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்ற எண்ணமில்லை. வேறு வார்த்தைகளில் கூறு வேண்டுமென்றால் எனக்கும் ஒரு துணை, குழந்தைகள் வேண்டும் என்று நினைக்கிறேன். திருமணத்தின் மூலம் ஒரு குடும்பம் உருவாக வேண்டும். என் திருமணம் விரைவில் நடக்குமா என்று பார்ப்போம். திருமணம் செய்து கொண்டால் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பேன். மகிழ்ச்சி என்பது வாழ்க்கையில் ஒரு குறுகிய காலத்திற்கு மட்டுமல்ல,” என உணர்வுபூர்வமாய் பேசியுள்ளார்.

நடிகர் சரத்குமார், கிரிக்கெட் வீரர் கங்குலி, ஹிந்தி நடிகர் மனோஜ் திவாரி, போஜ்புரி நடிகர் ரவி கிஷன் ஆகியோருடன் காதல் கிசுகிசுவில் சிக்கியவர் நக்மா.

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *