அதிமுகவுடன் பாமக கூட்டணி : எடப்பாடி பரபரப்பு அறிவிப்பு..!

Advertisements
அதிமுகவுடன் பாட்டாளி மக்கள் கட்சி கூட்டணி சேரப் போவதாக பரபரப்பு தகவல் ஒன்றை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ளார்.
மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற குரலோடு தமிழ்நாடு முழுவதும் 100 தொகுதிகளுக்கும் மேல் சுற்றுப்பயணம் செய்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று சென்னையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை கூட்டி இருந்தார் .
இந்த கூட்டத்தில் அனைத்து மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர் . ஏற்கனவே அதிமுகவுடன் ஒரு பெரிய கட்சி கூட்டணியில் சேரும் என்று எடப்பாடி பழனிச்சாமி பேசி வந்தார்
இந்த நிலையில் நேற்று நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி பரபரப்பான ஒரு தகவலை வெளியிட்டுள்ளார் .
முதல் கட்டமாக அவர் தனது மாவட்ட செயலாளர்கள் அனைவரையும் அந்தந்த பகுதிகளில் மாற்றுக் கட்சியினரை அதிமுகவில் இணைக்கும் பணியை செய்யும் படி கேட்டுக் கொண்டார் . இதனைத் தொடர்ந்து அதிமுகவுடன் பாட்டாளி மக்கள் கட்சி வருகிற தேர்தலில் கூட்டணி வைக்கிறது என்ற அறிவிப்பை வெளியிட்டார் அப்பொழுது மாவட்ட செயலாளர்கள் அனைவரும் கைதட்டி மகிழ்ந்தார்கள் .
இருந்த போதிலும் மாவட்ட செயலாளர்கள் மத்தியில் ராமதாஸ் தலைமையில் ஒரு பாட்டாளி மக்கள் கட்சி அன்புமணி தலைமையில் ஒரு பாட்டாளி மக்கள் கட்சி என செயல்படுவதை குறிப்பிட்டு கேள்வி எழுப்பினார்கள். இந்த நிலையில் அதற்கும் எடப்பாடி பழனிச்சாமி பொது மேடையிலேயே தகவல் ஒன்றை வெளியிட்டார்
பாட்டாளி மக்கள் கட்சியில் நடப்பது குடும்பச்சண்டை தான் வெகு விரைவிலேயே மருத்துவர் ராமதாஸ் மருத்துவர் அன்புமணி ஆகியோர் ஒன்றாக இணைவார்கள் அவர்கள் ஒன்றாக இணைந்த பாட்டாளி மக்கள் கட்சி நம்முடன் இணைய போகிறது என்று பலத்த கைதட்டலுக்கு மத்தியில் பேசினார்.
இதில் விசேஷம் என்னவென்றால் ஏற்கனவே மருத்துவர் அன்புமணி பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி சேர்வதற்கான முயற்சிகளை செய்து வருகிறார் இது தொடர்பாக அவர் உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் பேசி இருக்கிறார் அதே சமயம் அமைச்சாகும் தந்தை மகன் இருவரும் ஒன்று சேர்ந்தால் தான் கூட்டணி பற்றி பேசலாம் என்று அமித் ஷா சொல்லிவிட்டதாக தெரிகிறது .
இதனிடையே மருத்துவர் ராமதாஸ் திமுகவுடன் கூட்டணி வைத்துக் கொள்வதற்காக பேசி வந்தார் இருந்தபோதிலும் அதற்கு திமுக தரப்பிலிருந்து பதில் தெரிவிக்கவில்லை . இந்த சூழ்நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருக்கும் தகவல் தற்பொழுது தமிழக அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *