பாகிஸ்தானில் நூற்றாண்டு பழமையான இந்து கோயில் இடிப்பு – இந்தியா கண்டனம்!!

Advertisements

பாகிஸ்தானில் நூற்றாண்டு பழமையான இந்து கோயில் இடிக்கப்பட்ட சம்பவத்திற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானில் நூற்றாண்டு பழமையான இந்து கோயில் இடிக்கப்பட்டதாக ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், பாகிஸ்தானின் நரோவால் மாவட்டம் சிராஜ் கிராமத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க கோயில் அழிக்கப்பட்ட தகவலுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

 

சிறுபான்மையினரின் வழிபாட்டுத் தலத்தைப் பாதுகாக்கத் தவறிய பாகிஸ்தான் அதிகாரிகளின் அலட்சியம் கவலைக்குரியது எனக் குறிப்பிட்டார். இது குறித்து உடனடியாக வெளிப்படையான விசாரணை நடத்திப் பொறுப்பானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மேலும், சேதப்படுத்தப்பட்ட கோயிலை மீட்டுப் புனரமைப்பதுடன், சிறுபான்மையினரின் பாதுகாப்பையும் அவர்களது மத மற்றும் கலாச்சார பாரம்பரியத்தையும் பாகிஸ்தான் அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *