Nita Ambani: “மும்பை குடிமகன்” விருது!

Advertisements

நீடா அம்பானிக்கு “மும்பை குடிமகன்” விருது. பாம்பே ரோட்டரி கிளப் அறிவிப்பு.

அம்பானியின் மனைவி  நீடா அம்பானிக்கு 2023-24 ஆம் ஆண்டுக்கான “மும்பை குடிமகன்” விருதை வழங்கிக் கவுரவித்துள்ளது பாம்பே ரோட்டரி கிளப். பொது  சேவைகளான  சுகாதாரம், கல்வி, விளையாட்டு, கலை மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றுக்கு அவர்  ஆற்றிய அரிய பங்கினை அங்கீகரிக்கும் விதமாக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

ரிலையன்ஸ் தொண்டு நிறுவனத்தில் மேலாளராக நீடா அம்பானி உள்ளார். மேலும்  ஃபுட் பால் ஸ்போர்ட்ஸ் டெவலப்மண்ட் லிமிட்டடின் நிறுவனராகவும் உள்ளார். அது மட்டுமல்ல சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்தியப் பெண்மணி ஆவார்.

நியூயார்க்கின் மெட்ரோபாலிட்டன் மியூசியம் ஆஃப் ஆர்ட் வாரியத்தின் கௌரவ அறங்காவலராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்தியப் பெண்மணி இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய கலை மற்றும் கலாச்சாரத்தைப் போற்றும் விதமாக மும்பையில் கலாச்சார மையத்தையும் தொடங்கியுள்ள  இவர், மும்பையில் உள்ள சர் எச் என் ரிலையன்ஸ் அறக்கட்டளை மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம்மூலம் ஏழை எளிய மக்களுக்கு உலக தரம் வாய்ந்த மருத்துவ சேவையையும் வழங்கி வருகிறார்.

இதனைக் கருத்தில்   கொண்டு பாம்பே ரோட்டரி கிளப் இவருக்கு  மும்பை குடிமகன் விருது வழங்கிக் கவுரவித்துள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *