Nayan Viki: குழந்தைகளின் பிறந்த நாளைக் கொண்டாடிய நயன்-விக்கி !

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஜோடி தங்களுடைய இரட்டை குழந்தைகளின் முதல் பிறந்த நாளை இன்று கொண்டாடினார்கள்.

சென்னை: நடிகை நயன்தாரா- இயக்குனர் விக்னேஷ் சிவன்  கடந்த ஆண்டு திருமணம்செய்துகொண்ட பின்னர்  இரட்டை குழந்தைகளை  வாடகை தாய் மூலம்பெற்றெடுத்தனர்.பின்னர்   நடிகை நயன்தாரா திரைப்படங்களில் நடிப்பதோடு, குழந்தைகளை வளர்ப்பதிலும் அதிக அக்கறை எடுக்கிறார்.

படப்பிடிப்பு முடிந்ததும் உடனடியாக வீட்டுக்குத் திரும்பிக் குழந்தைகளுக்கு உணவு ஊட்டுவது, உடைகள் மாற்றுவது என்று அவர்களைப் பராமரிப்பதில் நேரம் செலவிட்டு வருகிறார். இந்நிலையில், நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஜோடி தங்களுடைய இரட்டை குழந்தைகளின் முதல் பிறந்த நாளை இன்று கொண்டாடினார்கள்.

இதுபற்றி விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவில், என் முகம் கொண்ட… என் உயிர், என் குணம் கொண்ட… என் உலக் (இந்த வரிகளைப் பதிவு செய்ய மற்றும் நம்முடைய புகைப்படங்களை ஒன்றாக வெளியிட நீண்டகாலம் காத்திருந்தேன் எனதருமை குழந்தைகளே) எனத் தெரிவித்து, என்னுடைய மகன்கள் உயிர் ருத்ரோநீல் மற்றும் உலக் தெய்வீக் ஆகியோருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் எனத் தெரிவித்து உள்ளார்.


இதுபற்றி வெளியிடப்பட்ட புகைப்படத்தில், இரட்டை குழந்தைகள் இருவரும் கருப்பு மற்றும் வெள்ளை நிற ஆடைகளில் காணப்படுகின்றனர். இந்தப் பதிவை வெளியிட்டதும், ரசிகர்கள் பலரும் விமர்சன பகுதியில் பிறந்த நாள் வாழ்த்துக்கான செய்திகளைக் குவித்து வருகின்றனர். தங்களது வாழ்த்துக்களையும் மகிழ்ச்சியையும் பகிர்ந்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *