குழப்பத்தில் புதிய குற்றவியல் சட்டங்கள்… சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கருத்து!

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய குற்றவியல் சட்டங்கள் மக்களை குழப்பத்தில் ஆழ்த்தும் வகையில் உள்ளது” என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்து உள்ளனர். குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் தி.மு.க., அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தாக்கல் செய்த மனுவில், ‛‛ பார்லிமென்டில் எந்த விவாதமும் இல்லாமல் அவசர கதியில் சட்டம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. இச்சட்டங்கள், அரசியலமைப்புக்கு விரோதமானது என அறிவிக்க வேண்டும்” எனக்கூறியிருந்தார்.இந்த மனுவை விசாரித்த ஆர்.எஸ்.சுந்தர், செந்தில்குமார் அமர்வு,‛‛ புதிய குற்றவியல் சட்டங்களை அமல்படுத்துவதற்கு முன்னர் சட்ட ஆணையத்தை ஆலோசித்து இருக்க வேண்டும்.

இச்சட்டங்கள் மக்களை குழப்பத்தில் ஆழ்த்தும் வகையில் உள்ளது” இந்த மனுவுக்கு 4 வாரங்களில் பதிலளிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உத்தரவிட்டு உள்ளனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *