
புதுடில்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 752 பேருக்குக் கோவிட் தொற்று உறுதியாகியுள்ளது. 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 752 பேருக்குக் கோவிட் தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,997ல் இருந்து 3,420 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாகக் கேரளாவில் 565 பேருக்குக் கோவிட் தொற்று உறுதியாகி உள்ளது.
கேரளாவில் இரண்டு, ராஜஸ்தான் மற்றும் கர்நாடகாவில் தலா ஒன்று என 4 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு 5,33,332 ஆக உயர்ந்துள்ளது. தற்போது வரை கோவிட் தொற்றிலிருந்து 4,44,71,212 குணம் அடைந்துள்ளனர். இதுவரை 220.67 கோடி பேருக்குக் கோவிட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 52 சதவீதம் கோவிட் பாதிப்பு அதிகரித்துள்ளது என உலக சுகாதார மையம் கவலை தெரிவித்துள்ளது. மேலும், ” கடந்த 28 நாட்களில் மட்டும் 8.5 லட்சம் பேர் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்குக் காரணம் ஜேஎன் 1 கொரோனா வைரஸ்தான். ஆனால் நல்வாய்ப்பாக உயிரிழப்பு 8 சதவிகிதம் குறைந்திருக்கிறது” என உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.


