
ஆம்ஸ்டார்டா:
உலகின் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் டாடா ஸ்டீல் சர்வதேச செஸ் போட்டி நெதர்லாந்து நாட்டில் உள்ள விஜ் ஆன் ஜீயில் நடைபெற்று வருகிறது. 13 சுற்றுகளைக் கொண்ட இந்தப்போட்டி மாஸ்டர்ஸ் மற்றும் சேலஞ்சர்ஸ் என 2 பிரிவிலும் நடைபெறுகிறது.
மாஸ்டர்ஸ் பிரிவில் நடந்த 5-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய கிராண்ட் மாஸ்டரும் சென்னையை சேர்ந்தவருமான பிரக்ஞானந்தா, நெதர்லாந்தை சேர்ந்த மேத்ஸ் வார்மர் டாமை எதிர்கொண்டார்.
இந்த ஆட்டம் டிராவில் முடிந்தது. இதனால் இருவருக்கும் தலா 0.5 புள்ளிகள் வழங்கப்பட்டன.
பிரக்ஞானந்தா முதல் சுற்றில் ‘டிரா’ செய்தார். அதைத் தொடர்ந்து அவர் 3 சுற்றுகளில் வெற்றி பெற்றார். தற்போது ‘டிரா’ செய்துள்ளார்.
உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற சென்னை கிராண்ட்மாஸ்டரான டி.குகேஷ் 5-வது சுற்றில் ஜெர்மனி வீரர்வின் சென்ட் கெய்மரை தோற்கடித்தார். மற்ற இந்திய வீரர்களான அரிகிருஷ்ணா, எரிகேசி ஆகியோர் ‘டிரா’ செய்தனர்.
5 சுற்றுகள் முடிவில் பிரக்ஞானந்தா, உஸ்பெகிஸ் தான் வீரர் நோடிர் பெக்குடன் இணைந்து தலா 4 புள்ளிகளுடன் முன்னிலையில் உள்ளார்.
குகேஷ் 3.5 புள்ளியுடனும், அரிகிருஷ்ணா 3 புள்ளியுட னும் 3 மற்றும் 5-வது இடத்தில் உள்ளனர்.
