காஸ்ட்லி ஹேண்ட்பேக்குடன் வலம்வந்த தமன்னா!

Advertisements

இந்திய திரை உலகில் பிரபல கதாநாயகியாகத் திகழ்பவர் தமன்னா. தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் நடித்து முன்னணி கதாநாயகியாக இருந்து வருகிறார்.

சினிமா மட்டுமின்றி ‘லஸ்ட் ஸ்டோரிஸ்-2’ என்ற வெப் தொடரில் நடித்தார். படத்தில் அவருடன் நடித்த சக நடிகரான விஜய் வர்மாவுடன் தமன்னாவுக்கு காதல் ஏற்பட்டு இருவரும் பல்வேறு இடங்களில் டேட்டிங் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் தமன்னா மும்பை புறநகர் பகுதியில் ஒரு இடத்திற்கு வந்துள்ளார். அப்போது கார்கோ பேண்ட் மற்றும் சிவப்பு நிற டாப் அணிந்து கைப்பையுடன் வந்திருக்கிறார்.

தமன்னா அணிந்து வந்த உடைகள் கவர்ந்ததோ இல்லையோ அனைவரது பார்வையும் அவர் வைத்திருந்த ‘கைப்பை’ மீது விழுந்தது.

காரணம் தமன்னா வைத்திருந்த ‘கைப்பை’ விலை ரூ.3 லட்சத்து 28 ஆயிரத்து 61 ஆகும். விலை உயர்ந்த ஆடம்பர பையுடன் தமன்னா வந்திருந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *