Chattisgarh : ஜக்தல்பூரில் நக்சலைட்டுகள் 208 பேர் சரண்..!

Advertisements

சத்தீஸ்கர் மாநிலம் ஜக்தல்பூரில் நக்சல்பாரி இயக்கத்தைச் சார்ந்த பெண்கள் உட்பட 208 பேர் காவல்துறையினர் முன்னிலையில் ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டுச் சரணடைந்தனர்.

மத்திய இந்தியாவில் மகாராஷ்டிரம், சத்தீஸ்கர், ஒடிசா, ஆந்திர மாநிலப் பகுதிகளில் நக்சல்பாரி இயக்கத்தினர், மாவோயிச இயக்கத்தினரின் செயல்பாடுகள் உள்ளன.

அடுத்த ஆண்டு மார்ச் இறுதிக்குள் நக்சல் இயக்கத்தின் அச்சுறுத்தல் முற்றாக ஒழிக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

அதனால் நக்சல்பாரி, மாவோயிச இயக்கத்தினரைச் சரணடையச் செய்யவும், அவர்களின் மறுவாழ்வுக்கும் காவல்துறையினரும் அரசும் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் சத்தீஸ்கர் மாநிலம் ஜக்தல்பூரில் பெண்கள் உட்பட நக்சல்பாரி இயக்கத்தினர் 208 பேர் காவல் அதிரடிப்படையினர் முன்னிலையில் சரணடைந்தனர். அவர்கள் 153 ஆயுதங்களையும் ஒப்படைத்தனர்.

அவர்களின் மறுவாழ்வுக்கான நிதியுதவியை அரசு வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சரணடையும்போது இந்திய அரசமைப்பின் மீது தங்களுக்கு நம்பிக்கை உள்ளதாகவும், இன்று முதல் சமூக நீரோட்டத்தில் தாங்கள் இணைந்துகொள்வதாகவும் நக்சல்பாதிகள் உறுதிமொழியளித்தனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *