நேபாளத்தில் பயனிகளை ஏற்றிச் சென்றப் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் விழுந்து விபத்து ஏற்பட்ட நிலையில், 17 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
நேபாளத்தின் போக்கராவிலிருந்து காத்மாண்டுக்குப் பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்றப் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில், 17 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், 27 பேர் படுகாயம் அடைந்தனர். தொடர்ந்து, படுகாயமடைந்தவர்களை மீட்பு படையினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதையடுத்து, விபத்து தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


