ஒன்று சேரும் இரு துருவங்கள்..!

கமல் – ரஜினி இணையும் மகிழ்ச்சியைக் கொண்டாட, கோவை கலைஞர் UMT ராஜா 777 தீக்குச்சிகளில் பிரம்மாண்ட கலைப்படைப்பை உருவாக்கி அசத்தியுள்ளார்.

கோவை குனியமுத்தூரில் பிரபல குறுஞ்சிற்பக் கலைஞர் UMT ராஜா, 777 தீக்குச்சிகளில் ஒரு பிரம்மாண்டமான கலைப்படைப்பை உருவாக்கியுள்ளார்.

இந்தியத் திரையுலகில் இரு பெரும் துருவங்களான உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆகியோர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இணைந்து நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு, ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களையும் பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. இது குறித்து கலைஞர் UMT ராஜா கூறுகையில், கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் ஆகிய இருவரும் இணைந்து நடிக்கும் செய்தி கேட்டதுமே ஒரு ரசிகனாக தமக்கு பெரும் உற்சாகம் பிறந்ததாகவும், அந்த மகிழ்ச்சியைப் பறைசாற்றும் விதமாகவே இந்த 777 தீக்குச்சி சிற்பத்தை இரவு பகலாக உழைத்து உருவாக்கியதாகவும் தெரிவித்துள்ளார்.

தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்தத் தீக்குச்சி சிற்பம், கமல் மற்றும் ரஜினி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *