நீட் தேர்வு பாடத்திட்டம் இணையதளத்தில் வெளியீடு!

Advertisements

சென்னை:

தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ.) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பது,

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகள் மற்றும் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு நீட் தேர்வுமூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.

அதே போன்று, ராணுவ கல்லூரிகளில் பி.எஸ்.சி. நர்சிங் படிப்புக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வைத் தேசிய தேர்வுகள் முகமை (என்.டி.ஏ.) ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.

அதன்படி 2025-26-ம் கல்வி ஆண்டுக்கான நீட் தேர்வு அடுத்த ஆண்டு நாடு முழுவதும் தேர்வு நடைபெற உள்ளது.

அதில் 180 வினாக்கள் கேட்கப்படும். ஒவ்வொரு வினாவுக்கும் தலா 4 மதிப் பெண்கள் வீதம் மொத்தம் 720 மதிப்பெண்களுக்கு அத்தேர்வு நடைபெறுகிறது. தாவரவியல் மற்றும் விலங்கியலை உள்ளடக்கிய உயிரியல் பாடத்திலிருந்து 360 மதிப்பெண்களுக்கும், இயற்பியல் மற்றும் வேதியியலில் தலா 180 மதிப்பெண்களுக்கும் கேள்விகள் இடம் பெறும்.

அதற்கான பாடத் திட்டங்கள் https://www.nmc.org.in என்ற இணைய தளப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் கேள்விகள் இடம்பெறும்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *