NEET: உண்ணாவிரத போராட்டம்!

Advertisements

NEET | DMK | Hunger Strike

நீட் தேர்வுக்கு எதிராக மத்திய அரசையும், கவர்னரையும் கண்டித்து, ஆகஸ்ட் 20ல் திமுக சார்பில் உண்ணாவிரதம் போராட்டம் நடைபெற உள்ளதாக அக்கட்சி அறிவித்துள்ளது…

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதா தற்போது குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று தொடர்ந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி வருகின்றார்.

இந்தநிலையில், திமுக இளைஞர் அணி – மாணவர் அணி – மருத்துவ அணி ஆகியவை இணைத்து வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், தமிழ்நாட்டு மாணவர்களின் மருத்துவராகும் கனவைச் சிதைத்து – அவர்களின் உயிரைப் பறிக்கின்ற உயிர்க்கொல்லியாக நீட் தேர்வு உருவெடுத்திருக்கிறது. மாணவர்களை மட்டுமன்றி, பெற்றோரையும் மரணக்குழியில் தள்ளும் நீட் தேர்வை ரத்து செய்யாத மத்திய அரசையும், பொறுப்பற்ற கவர்னரையும் கண்டித்து, கழகத் தலைவர் – முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, தி.மு.கழக இளைஞர் அணி மாணவர் அணி மருத்துவ அணி சார்பில், தமிழ்நாடு முழுவதும், வரும் ஆகஸ்ட் 20 அன்று அந்தந்த மாவட்டத் தலைநகரங்களில் மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடத்தவுள்ளோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *