NEET: உண்ணாவிரத தேதி மாற்றம்!

Advertisements

NEET | DMK Hunger strike

திமுக நடத்தும் நீட் தேர்வுக்கு எதிரான உண்ணாவிரத போராட்டம் மதுரையில் மட்டும் வருகிற 23-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது…

மதுரை: திமுக நடத்தும் நீட் தேர்வுக்கு எதிரான உண்ணாவிரத போராட்டம் மதுரையில் மட்டும் வருகிற 23-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் திமுக இளைஞரணி சார்பில் நீட் தேர்வுக்கு எதிரான உண்ணாவிரத போராட்டம் நாளை நடைபெற உள்ளது.

இந்த நிலையில் பழங்காநத்தம் ரவுண்டானா அருகே நாளை நடைபெறவிருந்த திமுக உண்ணாவிரத போராட்டம் வருகிற 23-ம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் எழுச்சி மாநாடு நாளை நடைபெற உள்ள நிலையில் திமுகவின் உண்ணாவிரத போராட்ட தேதி மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *