
நெருக்கடியான தருணங்களில் தங்கள் தொழில்முறைத் திறனால் உயர்ந்து நிற்கும் தேசிய பேரிடர் மீட்புப் படையினருக்குப் பிரதமர் நரேந்திர மோடி பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார்.
தேசிய பேரிடர் மீட்புப் படையின் நிறுவன தினத்தையொட்டி பிரதமர் மோடி தனது சமூக வலைத் தளப்பதிவில் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். இதில், நெருக்கடியான தருணங்களில் தங்கள் தொழில்முறைத் திறனால் உயர்ந்து நிற்கும் தேசிய பேரிடர் மீட்புப் படையின் வீரர்களுக்கும் வீராங்களைகளுக்கும் தனது ஆழ்ந்த பாரட்டுகளைத் தெரிவித்தார்.
பேரிடர் ஏற்படும் மிகவும் சவாலான சூழ்நிலையில் உயிர்களை பாதுகாக்க அயராது பாடுபடுவதாகத் தெரிவித்தார். பல ஆண்டுகளாக தேசிய பேரிடர் மீட்புப் பணிகளில் முன்மாதிரியாக உருவெடுத்து,சர்வதேச அளவில் மிகுந்த மரியாதையைப் பெற்றுள்ளது என்று குறிப்பிட்டார்.



