
நடிகை நஸ்ரியா – பஹத் பாசில் ஜோடிக்கு இந்திய அளவில் அதிக ரசிகர்கள் இருக்கின்றனர். சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருந்து வந்த நஸ்ரியா திடீரென காணாமல் போனார். இந்நிலையில், அவர் போட்ட பதிவு ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. கியூட்டான ஜோடி என அவர்கள் இருவரையும் ரசிகர்கள் வர்ணிப்பதுண்டு. மலையாளத்தில் நடிகர்களுக்கு பிடித்த க்யூட்டான சேட்டை பெண் என்றால் நஸ்ரியா தான். அவரை புகழாதவர்கள் யாரும் இல்லை. குறும்பு பொண்ணு, எல்லோருக்கும் பிடித்த அன்பானவள், அடங்காதவள், என்ற பெயரையும் எடுத்திருக்கிறார்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு நஸ்ரியா, fagath பாசில் உடன் இணைந்து “சூக்சம தர்ஷினி” படத்தில் நடித்தார். இப்படம் மிகப்பெரிய ஹிட் ஆனது. எப்போதும் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் நஸ்ரியா பிறகு காணாமல் போனார். என்னா ஆனார் என்பதே தெரியவில்லை. பல மாதங்களாக இன்ஸ்டாவில் போஸ்ட் கூட போடவில்லை. எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ளாமல் இருந்தார். இந்நிலையில், நஸ்ரியா தனது இன்ஸ்டா பக்கத்தில் போட்ட பதிவை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அவருக்கு என்ன ஆச்சு என கேள்வி கேட்க தொடங்கிவிட்டனர்.
அந்த பதிவில், அனைவருக்கும் வணக்கம், நீங்கள் அனைவரும் நலமாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன். நான் ஏன் சிறிது காலமாக தொடர்பு கொள்ள முடியாத சூழலில் இருந்து வருவது பற்றி உங்களிடம் தெரிவித்து கொள்ள விரும்பினேன். எல்லோருக்கும் தெரியும் நான் சமூவலைதளத்தில் எந்த அளவிற்கு ஆக்டிவாக இருப்பேன். ஆனால், கடந்த சில நாட்களாக Emotional wellbeing and personal challenges உடன் போராடி வருகிறேன் என தெரிவித்துள்ளார்.
பேச முடியவில்லை: இதனால், யாருடனும் பேச முடியாமல் தூரத்தில் இருக்கும் நிலை ஏற்பட்டது. எனக்கு அழைப்பு விடுத்தவர்கள், என்னுடைய பதிலுக்காக காத்திருந்த அனைவருக்கும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இந்த இக்கட்டான சூழலில் எனது 30ஆவது பிறந்தநாளை கொண்டாட முடியாத நிலை ஏற்பட்டது. மேலும், “சூக்சம தர்ஷினி” பட வெற்றி விழாவிலும் கலந்துகொள்ள முடியாமல் போனது. இவை அனைத்திற்கும் மன்னிப்பு கோருகிறேன். மேலும், நான் கூடிய விரைவில் மீண்டு வருவேன். இப்போது நான் நன்கு குணமடைந்து வருகிறேன். அதற்கு அதிக நேரங்கள் ஆகலாம். இதை புரிந்து கொண்டு ஆறுதல் தெரிவிப்பவர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என நஸ்ரியா பதிவிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் கண்ணீர் விட்டு அழுகாத குறையாக ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். கூடிய விரைவில் மீண்டு வர வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர். நஸ்ரியாவுக்கு என்ன நடந்தது, பஹத் உடன் பிரச்னையா வேறு எதாவது நடந்ததா என ரசிகர்கள் கமெண்டில் கேட்டு வருகின்றனர்.



