இயற்கை பேரிடர்கள் இந்தியாவை சோதிக்கின்றன – பிரதமர் உருக்கமான பேச்சு

Advertisements

பிரதமர் மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிறு அன்று மனதின் குரல் நிகழ்ச்சி மூலமாக நாட்டு மக்களிடையே உரையாற்றுகிறார்.இன்றைக்கு மன் கி பாத் நிகழ்ச்சியின் 125 ஆவது எபிசோட் ஒளிபரப்பு செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதில், பண்டிகைக் காலம் நெருங்கி வரும் நிலையில், மக்கள் உள்நாட்டுப் பொருட்களை வாங்குவதைப் பெருமையாகக் கருத வேண்டும்.

லோக்கலுக்கு குரல் கொடுங்கள் மற்றும் ‘ஆத்மநிர்பார் பாரத்’ என்ற மந்திரம் மட்டுமே ஒரு வளர்ந்த இந்தியாவை உருவாக்கும். வாழ்க்கைக்குத் தேவையான அனைத்தும் சுதேசியாக இருக்க வேண்டும். என்று தெரிவித்தார்.டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு, இந்தியப் பொருட்கள் மீது 50% வரி விதித்த பிறகு இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்ட சூழலில், பிரதமர் மோடியின் இந்த உரை முக்கியத்துவம் பெறுகிறது.

தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, இந்தப் பருவமழைக் காலத்தில், இயற்கைப் பேரிடர்கள் நம் நாட்டைச் சோதித்து வருகின்றன. கடந்த சில வாரங்களாக, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் ஏற்பட்ட பெரும் பாதிப்புகளை நாம் கண்டோம். வீடுகள் சேதமடைந்தன, வயல்வெளிகள் மூழ்கின.இந்தச் சம்பவங்கள் ஒவ்வொரு இந்தியரின் மனதையும் வேதனைப்படுத்தியிருக்கிறது.

இந்தத் துயரமான தருணத்தில் இரவு பகலாக உழைத்த நமது பாதுகாப்புப் படையினரின் முயற்சிகளை நான் மனதாரப் பாராட்டுகிறேன். மனிதநேயத்திற்கு முன்னுரிமை அளித்த அனைத்து மக்களுக்கும் என் நன்றி என தெரிவித்துள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *