
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு தில்லியில் உள்ள புகழ் பெற்ற ஜமா மசூதியில் இன்று காலையில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு தொழுகையில் ஈடுபட்டனர்.
இஸ்லாமிய நாட்காட்டியின் 9 ஆவது மாதமான ரமலான் மாதம், இஸ்லாமியர்களுக்கு மிகவும் முக்கியமான மற்றும் புனிதமான மாதமாக கொண்டாடுகின்றனர்.
ரம்ஜான் மாதத்தில் இஸ்லாமியர்கள் தங்களது கடமைகளில் ஒன்றான நோன்பு இருப்பது வழக்கமாக உள்ளது. இந்த மாதத்தின் இறுதியில் வானில் தோன்றும் பிறையின் அடிப்படையில் இன்று ”ரம்ஜான்’ பண்டிகை கொண்டாடப்படுகிறது.
தொடர்ந்து, தில்லியில் உள்ள புகழ் பெற்ற ஜமா மசூதியில் இன்று காலையில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு தொழுகையில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, மும்பையிலும், ஜுமா மஸ்ஜித் மஹிம் தர்காவில் ஏராளமான மக்கள் தொழுகை நடத்தினர். தமிழகத்திலும் பல்வேறு இடங்களில் உள்ள மசூதியில் ரம்ஜான் பண்டிகை உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது.
ரம்ஜான் மாத நிறைவை முன்னிட்டு, கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. தொண்டு, இரக்கம் உள்ளிட்டவற்றின் மீதுள்ள மதிப்புகளை மக்களிடையே வலியுறுத்தும் வகையில் இந்த ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுகிறது.


