National Press Day 2023: தேசிய பத்திரிகை தினத்தை முன்னிட்டு பத்திரிகையாளர்கள், ஊடகவியலாளர்கள் அனைவருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
1996 -ஆம் ஆண்டு முதல் தேசிய பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா தொடங்கப்பட்ட நவம்பர்,16-ம் தேதி ‘தேசிய பத்திரிகை தின’மாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. ஜனநாயகத்தைப் பாதுகாப்பதில் முக்கிய அங்கமாக விளங்கும் ஊடகம் மற்றும் தொலைக்காட்சியின் பணிகளை அங்கீகரிக்கும் விதமாக இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
தேசிய பத்திரிகை தினத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்தியில்“ உண்மையான ஊடகவியலே துடிப்பான மக்களாட்சியின் கண்காணிப்பாளர்! எனவே, தேசிய பத்திரிகை நாளில், ஊடகத்தின் ஆற்றலையும் பொறுப்பையும் உணர்த்துவோம். அரசியல் அழுத்தங்களுக்குச் சிலர் அடிபணியும் இக்காலத்தில், சார்பற்ற நேர்மையான ஊடகவியலை முன்னெடுத்த, சுதந்திரமான ஊடகத்தின் அடிப்படை மாண்புகளை உயர்த்திப் பிடிப்போம். “ என்று தெரிவித்துள்ளார்.