பாஜகவே முறிந்து செல்லும் வரை அந்த கூட்டணியில்தான் இருப்போம்: ஓபிஎஸ் பரபரப்பு பேட்டி!

சென்னை செல்வதற்காக மதுரை வந்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், மணிப்பூரில் நிரந்தர அமைதியை ஏற்படுத்த மத்திய மாநில அரசுகள் முயற்சிகளை எடுக்க வேண்டும் என்று ஏற்கெனவே அறிக்கை விடுத்து இருந்தேன் என தெரிவித்திருந்தார். இன்று காலை ஆதிவாசி பெண்கள் இரண்டு பேர் கொடூரமான முறையில் இரண்டு மாதங்களுக்கு முன் பாதிக்கப்பட்டுள்ளனர். இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க வேண்டும் என்றும் மணிப்பூர் விவகாரத்தில் மக்கள் கவனத்தை ஈர்க்கும் வகையில் நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்போம் என்றும் தெரிவித்துள்ளார்.

பாஜக கூட்டணியிலேயே தொடர்ந்து நீடித்து வருகிறோம் என ஓ.பன்னீர்செல்வம் பேட்டி அளித்துள்ளார். கூட்டணியை பாஜக முறித்து கொள்ளும் வரை அந்த கூட்டணியில் தொடர்வோம் என ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தேனீ எம்.பி ரவீந்திரநாத் விவகாரத்தில் நிச்சயம் உச்ச நீதிமன்றத்தை நடுவோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்திய என நல்ல பெயரை வைத்திருக்கிறார்கள், அதை வரவேற்கிறோம் என ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆலோசனை கூட்டத்துக்கு அளிக்கப்படாத நிலையிலும் கூட்டணியில் தொடர்கிறோம் என தெரிவித்துள்ளார். மணிப்பூர் சம்பவம் போல் இனி நடைபெறாமல் பார்த்துக் கொள்வது ஒன்றிய, மாநில அரசுகளின் கடமை என ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *