தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியும், போலந்து நாட்டின் பிரதமர் டொனால்டு டஸ்கும் இரு நாடுகளிடையே பல்வேறு துறைகளில் உள்ள உறவுகளை மேம்படுத்துவது குறித்து விரிவாகப் பேச்சு நடத்தியுள்ளனர்.
போலந்து நாட்டின் பிரதமர் டொனால்டு டஸ்க் அரசுமுறைப் பயணமாக இந்தியாவுக்கு வந்துள்ளார். தில்லிக்கு வந்த டொனால்டு டஸ்க் ராஜ்காட்டுக்குச் சென்று காந்தி சமாதியில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
அரசுமுறைப் பயணமாக வந்துள்ள போலந்து நாட்டின் பிரதமர் டொனால்டு டஸ்க் தில்லியில் ஐதராபாத் இல்லத்துக்கு வந்தார். இல்லத்தின் முற்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி அவரை அழைத்துச் சென்றார். அதன்பின் இரு நாட்டுப் பிரதமர்கள், இரு நாட்டுக் குழுவினர் சந்தித்தனர். இரு நாடுகளிடையே பல்வேறு துறைகளில் உள்ள ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து விரிவாகப் பேச்சு நடத்தினர்.
பேச்சு நடத்திய பின் இந்திய, போலந்து பிரதமர்கள் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர்.



