சாத்தான்குளம் என்றாலே கொலை. கொலை என்றாலே சாத்தான்குளம்தான் நம் நினைவுக்கு வருகிறது. காரணம் காதல் என்றலே காவ வாங்கும் சம்பவம் அங்குதான் அரங்கேறி வருகிறது. அப்படி இன்றைக்கும் அதிகாலையில் சேவல் கூவும் முன்பே கத்தி குத்து நடந்ததால், இருவர் கத்திய சம்பவம் குறித்து நம் ஜெம் தொலைக்காட்சி மூலம் பார்க்கலாம்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள முதலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் 39 ஏ வயதான மேரி ரெஜிலா. இவரது குடும்பத்தினர் நள்ளிரவில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது, பயங்கர ஆயுதங்களுடன் மர்ம நபர் ஒருவர் அத்துமீறி வீட்டிற்குள் தீடிரென்று புகுந்தனர்.
அங்கு தூங்கிக் கொண்டிருந்த மேரியை அந்த நபர் கண் இமைக்கும் நேரத்தில் சரமாரியாக வெட்டியுள்ளார். அலறல் சத்தம் கேட்டு அவரைப் பாதுகாக்க ஓடிவந்த அவரது கணவர் முத்துக்கிருஷ்ணன் மற்றும் மகன் மீதும் கொடூர தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் மேரி மற்றும் அவரது கணவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த அவரது மகன் உயிருக்குப் போராடியபடி சரிந்தார். இதையடுத்து, வீட்டில் இருந்த மேரியின் இரண்டு இளம் மகள்களை அந்த நபர் மிரட்டி கடத்திச் சென்றார்.
தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில், உள்ளூர் உணவகத்தில் பரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வரும் ஞானப்பிரகாஷ் என்பவர்தான் இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்டது தெரியவந்தது.
பிரகாஷ், மேரியின் மகள்களில் ஒருவரை ஒருதலையாகக் காதலித்து வந்ததாகவும், அதற்கு மேரி கடும் எதிர்ப்பு தெரிவித்து அவரைக் கண்டித்ததாகவும் கூறப்படுகிறது. தன் காதலுக்கு இடையூறாக இருந்த மேரியைப் பழிவாங்கத் துடித்த பிரகாஷ், நள்ளிரவில் திட்டமிட்டு வீடு புகுந்து இந்தக் கொலையை அரங்கேற்றியுள்ளார்.
இரண்டு சிறுமிகள் கடத்தப்பட்டதால் தூத்துக்குடி மாவட்ட காவல் துறையினர் உடனடியாக உஷாராகினர். கடத்தப்பட்ட சிறுமிகளில் ஒருவர் கையில் வைத்திருந்த செல்போனின் சிக்னலை சைபர் கிரைம் பிரிவு போலீசார் துல்லியமாகக் கண்காணித்தனர்.
செல்போன் சிக்னல் காட்டிய இடத்தை நோக்கி விரைந்த தனிப்படை போலீசார், குற்றவாளி சிறுமிகளை மறைத்து வைத்திருந்த இடத்தை சுற்றி வளைத்தனர். பெரும் அசம்பாவிதம் எதுவும் நிகழாமல் இரு சிறுமிகளையும் எவ்வித காயமுமின்றி போலீசார் பத்திரமாக மீட்டனர். போலீசாரின் வருகையை உணர்ந்த பிரகாஷ் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டதால், அவரைப் பிடிக்க தனிப்படையினர் தீவிர வலைவீசி வருகின்றனர்.
சிறுமிகள் பத்திரமாக மீட்கப்பட்டது நிம்மதியைத் தந்தாலும், சொந்த வீட்டிற்குள்ளேயே நுழைந்து ஒரு பெண்ணை வெட்டிக் கொன்றுவிட்டு மகள்களைக் கடத்திச் செல்லும் அளவுக்குக் குற்றவாளிகளுக்குத் துணிச்சல் எப்படி வந்தது என்ற கோபமும் அச்சமும் பலரது மத்தியில் வெடித்துள்ளது.
இச்சம்பவம் குறித்து பாமக தலைவர் அன்புமணி சினம் கொண்டு சீறியதையும் கூறுகிறேன். நள்ளிரவில் ஆயுதங்களுடன் ஒரு கும்பல் சுதந்திரமாக உலா வந்து, வீட்டுக்குள் புகுந்து தாக்குதல் நடத்துகிறது என்றால் அதைக் காவல்துறையின் தோல்வியாகத் தான் கருத வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இரவில் உறங்கும் போது கூட ஒரு குடும்பத்திற்குப் பாதுகாப்பு இல்லை என்றால் மக்களால் நிம்மதியாக வாழ முடியாது என்று தெரிவித்துள்ளார். குற்றங்களுக்குக் காரணமான கும்பலை காவல்துறை உடனடியாகக் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்றும், மாநிலம் முழுவதும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் வீட்டிற்குள்ளே இருக்கும் தாய் மற்றும் பெண்களுக்குக் கூட பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. பெயரளவில் முன்னெடுப்புகளை அறிவிப்பதை விட்டுவிட்டு, குற்றங்கள் நடப்பதற்கு முன்பே தடுக்கும் வகையிலும், பெண்களின் அச்சத்தைப் போக்கும் வகையிலும் அரசும் காவல்துறையும் இரும்புக்கரம் கொண்டு செயல்பட வேண்டும்” என்று சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் குரல் எழுப்பி வருகின்றனர்.
காதல் என்பது காலத்தின் கட்டாயம். காரணம் அது மனதில் இருந்து பிறந்தது. அதற்கு இறப்பில்லை. இருப்பினும் அதற்காக இரண்டு உயிரைகளை பலி கொடுப்பதா. தான் 20 வயதுரை பொத்தி பொத்தி வளத்த பிள்ளையை பரோட்ட போடுபனுக்கு கொடுப்பதா என்று மறுப்பு தெரிவித்த ஒரே காரணத்திற்காக இன்று காதலனால் பெற்றோர்கள் வெட்டி கொத்து பரோட்டா போடப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆக இந்த கொலைகாரனுக்கு சட்டம் தகுந்த பாடத்தை கற்பிக்குமா அதன்மூலம் மீண்டும் இதுபோன்ற பல சம்பவங்கள் நடக்காமல் பல உயிர்கள் தப்பிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.


