DLS Method: 21 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி!

Advertisements

DLS Method: உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் 35-வது லீக் போட்டி பெங்களூருவில் இன்று நடைபெறுகிறது. இதில் நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.

Advertisements

இதனால் நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் ஆட களமிறங்கியது. அந்த அணியின் துவக்க வீரர்களாக கான்வே மற்றும் ரச்சின் ரவீந்திரா களமிறங்கினர். இந்த ஜோடி 68 ரன்களை சேர்த்த போது, கான்வே 35 ரன்களில் அவுட் ஆனார்.

இதைத் தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் கேன் வில்லியம்சன் பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். பிறகு ரச்சின் ரவீந்திராவுடன் இணைந்து கொண்ட வில்லியம்சன் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த இருவரும் அரைசதம் அடித்தனர். கேன் வில்லியம்சம் 95 ரன்களில் தனது விக்கெட்டை பறிக்கொடுத்தார்.

ரச்சின் ரவீந்திரா 108 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். இவரை தொடர்ந்து களமிறங்கிய டேரில் மிட்செல் மற்றும் மார்க் சாப்மென் முறையே 29 மற்றும் 39 ரன்களை எடுத்தனர். இதன் மூலம் நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 401 ரன்களை குவித்தது. இதை அடுத்து 402 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கை பாகிஸ்தான் துரத்தியது.

பாகிஸ்தான் அணியின் துவக்க வீரரான அப்துல்லா ஷஃபிக் 4 ரன்களில் அவுட் ஆக, இவருடன் களமிறங்கிய ஜமான் 81 பந்துகளில் 126 ரன்களை குவித்தார். இவருடன் ஜோடி சேர்ந்து ஆடிய கேப்டன் பாபர் அசாம் 66 ரன்களை எடுத்தார். 25.3 ஓவர்களில் பாகிஸ்தான் அணி 1 விக்கெட் இழப்புக்கு 200 ரன்களை குவித்த நிலையில், மழை குறிக்கிட்டது.

தொடர்ந்து மழை பெய்த காரணத்தால் போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது. எனினும், டி.எல்.எஸ். விதிகளின் படி பாகிஸ்தான் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *