
சோனியா காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு அரசியல் தலைவர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இத்தாலி நாட்டில் பிறந்து இந்தியாவில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் மனையான திருமதி சோனியா காந்தி உலகின் சிறந்த பெண் தலைவர்களில் ஒருவர். இந்தியாவின் வளர்ச்சியில் தன்னுடைய பங்களிப்பை ஆர்வத்துடன் இன்று வரை செய்து வருகிறார்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி இன்று 77-ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரது பிறந்தநாளை காங்கிரஸ் கட்சியினர் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு, தெலுங்கானா முதல்வர்கள் உட்பட இந்தியாவின் அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் , முக்கிய பிரமுகர்களும் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்தியா முழுவதிலும் உள்ள காங்கிரஸ் கட்சியினர் சோனியா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் சோனியா காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், சோனியா காந்தி நீண்டகாலம் நல்ல உடல் நலத்துடன் இருக்க வேண்டும் என கூறியுள்ளார்.



