P. K. Sekar Babu: அம்மா உணவகம் தேவை என்றால் பரிசீலிக்கப்படும்!

Advertisements

கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டுப் பேருந்து முனையத்தில் மக்களுக்குத் தேவையான அனைத்துபணிகளும் பொங்கல் பண்டிகைக்கு முன் ஏற்படுத்தப்படும் என்றும் அம்மா உணவகம் தேவை என்றால் பரிசீலிக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

சென்னை வால்டாக்ஸ் சாலையில் உள்ள கல்யாணபுரத்தில்புதிதாகக் கட்டப்பட்டுள்ள தமிழ்நாடு
நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளை அமைச்சர் சேகர்பாபு நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர். ஆய்வின்போது மண்டல குழுத் தலைவர் ஸ்ரீராமலு மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் பேசுகையில்:

தமிழ்நாடு நகர்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் கல்யாணபுரத்தில்254குடியிருப்பு திறக்கத் தயாராக உள்ளது.தை மாதம் 1ஆம் தேதி முதல் பயன்பட்டாடிற்கு வருகிறது.9அடுக்கு மாடி, லிப்ட், ஜெனரேட்டர், 2 அடுக்குமாடி கட்டிடங்கள் உள்ளன எனத் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து அமைச்சர் சேகர்பாபு பேசுகையில்:கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் முழுமையாக ஆய்வு செய்தோம்.குடி நீர் குழாய், கழிவறை பயன்பாட்டில் உள்ளது.இதுகுறித்து வெளியான தகவல் தவறானது.

கோயம்பேட்டிலிருந்துமுன்பதிவுசெய்தகூடுதல்கட்டணம்வங்கிகணக்கில்செலுத்தடுவதாகக்கூறியிருந்தோம்.அதில்  தாமதம் உள்ளதால் நடத்துனர் மூலமாகக் கையிலேயேகொடுக்கிறோம்.உண்மையான பிரச்சனை மாநகரப் பேருந்துகளில் இறங்கி வெளி மாவட்ட பேருந்துகளுக்குச் செல்வது தான்.பேட்டரி கார் உள்ளது கூடுதல் பேட்டரி கார் ஏற்பாடுசெய்யப்படவுள்ளது.நேற்றிரவு மட்டும் 10ஆயிரம் பேர் பயணம் மேற்க்கொள்ளவுள்ளார்கள்.புதிதாகத் திறக்கப்பட்ட இடம் அதில் குறைகள் இல்லை என்று சொல்லவில்லை மக்கள் பயன்பாட்டிற்கு வந்து 48 மணி நேரம் தான் ஆகிறது அங்குள்ள குறைகள் 2-3நாட்களில் சரிச்செய்யப்படும்.

தினந்தோறும் கண்காணிக்கிண்றோம்.பயணிகள் மகிழ்ச்சியோடு இருக்கிறார்கள் என்று செய்தி வரும் அளவிற்குபணிகள்முடிக்கப்படும்.தனியாருக்குஒற்றைசாளரமுறையில்டெண்டர்கொடுக்கப்பட்டுள்ளது.உணவைச் சேர்ந்த நிறுவனத்திற்கு டெண்டர் கொடுக்கப்பட்டுள்ளதுஅவர்கள் விமானநிலையம்  உள்ளிட்டவற்றை ஏற்கனவே பணி செய்கிறார்கள்.

ஒவ்வொரு வேலைக்கும் தனித்தனியே ஆள் வைப்பதை விடக் குழப்பத்தைத் தவிர்க்கத்தான்தனியாருக்குகொடுக்கபட்டுள்ளது.2.40கோடிசி.எம்.டி.ஏக்குவருடந்தோறும்செலுத்துவார்கள்.இதுகுறித்து எப்போது வேண்டுமானாலும் தகவல்களை வெளிப்படையாகக் கொடுப்போம்.கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே இருக்கக்கூடிய உணவகங்களில் விலை கூடுதலாக இருக்கிறது அம்மா உணவகம் அமைக்கப்படுமா என்ற கேள்விக்கு?கிளாம்பாக்கத்தில் அம்மா உணவகம் தேவை என்றால் பரிசீலிக்கப்படும்.
பொங்கல் வரையில் மக்கள் தேவையைப் பூர்த்தி செய்யும் நடவடிக்கைகள் எடுக்கிறோம்.

பொங்கலுக்கு பின் விரிவான செய்தியாளர் சந்திப்பு வைக்கிறோம்.அப்போது ஏதேனும் இருந்தால் கூறுங்கள்.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்குறித்த பீதியினை ஊடகங்கள் கிளப்ப வேண்டாம்.நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க தான் இத்திட்டம்.விமான நிலையம் அளவிற்கு பேருந்து நிலையம் உள்ளது.

1200மீட்டர் 3மீட்டர் அகலத்தில் மழை நீர் வடிகால் பணிகளை இரு மாதத்தில் 13கோடி ரூபாயில் கட்டியுள்ளோம்.
கிளாம்பாக்கத்தில் 20கோடி ஒதுக்கி இரயில் நிலையம் கொண்டு வரப்படவுள்ளது.ஆகாய நடைபாதையும் 120கோடியில் உருவாக்கப்படவுள்ளது.நில எடுப்பு பணிகளுக்காக 40 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது முதற்கட்டமாகதிறந்தோம் விட்டோம் என்று இல்லாமல் தொடர்ந்து கண்காணித்து தேவையான பணிகளைச் செய்வோம் என்றார்..

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *