Narendra Modi: தேவையான உதவி செய்ய தயார்!  

Advertisements

தமிழ்நாட்டுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என முதல்வர் ஸ்டாலினிடம் பிரதமர் மோடி உறுதியளித்தார்.

மிக்ஜம் புயல் மழையினால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. பாதிப்படைந்த பல பகுதிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில்  சென்று நிவாரண உதவிகளை மக்களுக்கு வழங்கினார். வெள்ள பாதிப்பில் இருந்து மக்களை மீட்க அரசு எந்திரம் முடுக்கிவிடப்பட்டுள்ளது. மத்திய அரசும் தனது தரப்பில் நிவாரண உதவிகளை செய்யவுள்ளது.

இந்தநிலையில் மிக்ஜாம் புயல் பாதிப்பு தொடர்பாக பிரதமர் மோடியுடன் திமுக எம்.பி. டி.ஆர். பாலு சந்தித்தார். அப்போது இடைக்கால நிவாரணம் கோரி பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடித்ததை டி.ஆர்.பாலு வழங்கினார். அந்த சந்திப்பில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டிற்கு இடைக்கால நிவாரணமாக ரூ. 5,060 கோடி வழங்க கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து பிரதமர் மோடியை சந்தித்த டி.ஆர். பாலு அடுத்ததாக உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் சந்திக்கவுள்ளார்.

வெள்ளச்சேதம் – முதலமைச்சரிடம் கேட்டறிந்தார் பிரதமர் மோடி:

சென்னை புயல், மழை வெள்ள பாதிப்புகளை முதலமைச்சர் ஸ்டாலினிடம் தொலைபேசி மூலம் பிரதமர் மோடி கேட்டறிந்தார். அப்போது முதலமைச்சர் ஸ்டாலின், புயல் மழை வெள்ள பாதிப்பை பார்வையிட மத்திய அரசின் பல்துறை குழுவை உடனே அனுப்பி வைக்க வேண்டும் என தெரிவித்தார்.

தமிழ்நாட்டுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலினிடம் பிரதமர் மோடி உறுதியளித்தார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *