Car Rent: இனி அனைத்து கார்களையும் வாடகைக்கு விடலாம்!

சொகுசு கார்கள் உள்ளிட்ட அனைத்து வகையான கார்களையும் பொதுப் போக்குவரத்து வாகனங்களாக (மஞ்சள் போர்டு) பதிவு செய்து இயக்கப் போக்குவரத்து துறை ஆணையர் அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சென்னை: தமிழக போக்குவரத்து துறை ஆணையர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

சொகுசு கார்கள் உள்ளிட்ட அனைத்து வகையான கார்களையும் பொதுப் போக்குவரத்து வாகனங்களாக (மஞ்சள் போர்டு) பதிவு செய்து இயக்கப் போக்குவரத்து துறை ஆணையர் அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளார்

குறிப்பிட்ட கார் வகைகளை மட்டுமே வாடகை கார்களாகப் பயன்படுத்த முடியும் என்ற விதி மாற்றப்படுகிறது.
மற்ற மாநிலங்களைப் போல் தமிழகத்திலும் அனைத்து வகை கார்களையும் பொது போக்குவரத்துக்கு பயன்படுத்தலாம்.

சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில் ஆடம்பர கார்களையும் வாடகைக்குப் பயன்படுத்தி பதிவு செய்யலாமெனப் போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *