
திமுக, மதிமுக தொடங்கி அதிமுக வரை அரசியல் கட்சிகளில் பயணித்தவர் தான் இந்த நாஞ்சில் சம்பத் . தற்போது தவெக – வில் அரசியல் பயணத்தை தொடங்கி ஐக்கியமாகியுள்ளார். தவெக தலைவர் விஜய்க்கு, ’நீயும் முதல்வராகலாம்…’ என்ற புத்தகத்தை வழங்கிய நாஞ்சில் சம்பத், தன்னை தவெகவில் இணைத்துக் கொண்டார்.
இதைத் தொடர்ந்து, சென்னை ஆழ்வார்பேட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாடு முழுவதும் கட்சியின் பரப்புரையாளராக பவனி வர விஜய் அனுமதித்திருப்பதாகக் கூறினார். திருப்பரங்குன்றம் விவகாரத்தில் விஜய் கருத்து சொல்லாமல் இருப்பதுதான் நல்லது என்றும் நாஞ்சில் சம்பத் தெரிவித்தார்.
இந்நிலையில் நாஞ்சில் சம்பத்திற்கு தவெகவில் கழகத்தின் பரப்புரை செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தவெக தலைவர் விஜய் வெயிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தின் மூத்த அரசியல்வாதிகளுள் ஒருவர். சிறந்த பேச்சாளர். அனைவரிடத்திலும் இனிமையாகப் பழகக் கூடியவர். நாஞ்சில் சம்பத் தம்மைத் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைத்துக்கொண்டுள்ளார்.
மக்களுக்கான அரசியலில் நம்மோடு பயணிக்க இருக்கும் அவரை வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.நாஞ்சில் சம்பத்திற்கு கழகத்தின் பரப்புரைச் செயலாளர் (Campaign Secretary)பொறுப்பில் நியமிக்கப்படுகிறார் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இவர், பொதுச் செயலாளர் என்.ஆனந்த் அவர்களுடன் இணைந்து தன்னுடையப் பணிகளை மேற்கொள்வார்.
கழக நிர்வாகிகளும் தோழர்களும் இவருக்கு முழு ஒத்துழைப்பு நல்கி, மக்கள் பணியாற்றிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார் .




