TTF Vasan: பைக்கை எரிக்க உத்தரவு!

Advertisements

டிடிஎஃப் வாசன் ஜாமீன் மனுவை மீண்டும் தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம் அவரது பைக்கை எரிக்க உத்தரவிட்டுள்ளது.

சென்னை – வேலூர் நெடுஞ்சாலையில், காஞ்சிபுரம் அருகே தாமல் பகுதியில் வேகமாகவும், கவனக்குறைவாகவும், அபாயகரமாகவும் இருசக்கர வாகனத்தை இயக்கி, விபத்துக்குள்ளானதாகப் பாலுச்செட்டி சத்திரம் போலீசார் பதிந்த வழக்கில்,  யூ டியூபர் டி.டி.எப்.வாசன், செப்டம்பர்  19ம் தேதி கைது செய்யப்பட்டார்.

புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள டி.டி.எப்.வாசன், ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவைக் காஞ்சிபுரம் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இந்நிலையில், ஜாமீன் கேட்டு டி.டி.எப்.வாசன் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், சாலையில் மிதமான வேகத்தில் வந்த நிலையில், கால்நடைகள் சாலையைக் கடந்ததால் திடீரெனப் பிரேக் போட்டதால், வாகனத்தின் சக்கரம் தூக்கியதாகவும், பிரேக் போடாமல் இருந்தால் கால்நடைகள் மற்றும் தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.

மேலும், விபத்தில் காயமடைந்துள்ளதால், சிறையில் உரிய சிகிச்சை பெற முடியவில்லை எனவும், புண்கள் மோசமாகி வருவதால், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டியுள்ளதால், ஜாமீன் வழங்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார். தான் அப்பாவி என்றும், எந்தக் குற்றத்திலும் ஈடுபடவில்லை என்றும், நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளுக்குக் கட்டுப்படுவதாகவும் மனுவில் தெரிவித்துள்ளார்.

இந்த மனு, விசாரித்த நீதிபதி சி.வி.கார்த்திகேயன் டிடிஎஃப் ஜாமின் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார். வழக்கு விசாரணையில் டிடிஎஃப் வாசனை யூடியூபில் 45 லட்சம் சிறார்கள்பின் தொடர்வதாகவும், அவர்கள் டிடிஎஃப் வாசனை போல் அதிவேகமாக வாகனம் ஒட்டுவதாகவும் சிலர் குற்ற செயல்களில் ஈடுபடுவதாகக் காவல்துறை தரப்பில் வாதம் முன் வைக்கப்பட்டது.

இந்த நிலையில் டிடிஎஃப் வாசனி ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்த நீதிபதி, அதிகவேகமக செல்லும் டிடிஎஃப் பைக்கை எரித்து விட வேண்டும் என்றார். மேலும், விளம்பரத்திற்காக ரேஸ் செல்லும் டிடிஎஃப் வாசன் யூடியூப் சேனலை மூட வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *