Avadi: அடுத்தடுத்து சிக்கிய போதை மாத்திரைகளால் பரபரப்பு!

ஆவடி அருகே வீட்டில் விற்பனைக்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 600 போதை மாத்திரைகள் மற்றும் 4 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து மூன்று பேரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

ஆவடியில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு தேர்தல் பறக்கும் படையினரால் அரசு பேருந்தில் கடத்திச் செல்லப்பட்ட 15000 போதை மாத்திரைகள் சிக்கியது கடத்தலில் ஈடுபட்ட மூன்று இளைஞர்களைப் போலீசார் கைது செய்தனர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் ஆவடி மாநகர காவல் துணை ஆணையர் ஐமன் ஜமால் தலைமையில் தனிப்படை போலீசாரை முடிக்கி விடப்பட்டு போதை பொருள் கடத்தல் குறித்து கண்காணிப்பு தீவிர படுத்தப்பட்டது.

இதற்கிடையே நேற்றிரவு சந்தேகத்திற்கு இடமாக வந்த இளைஞர்கள் இருவரை பிடித்துப் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் முன்னுக்குப் பின் முரணாகப் பதில் அளித்ததை அடுத்து காவல் நிலையம் அழைத்துச் சென்று மேற்கொண்ட விசாரணையில்  ஆவடி அருகே சோழவரம் பகுதியில் கிருஷ்ணா காந்த் என்பவரிடம் மாத்திரை வாங்கி வந்ததாகத் தெரிவித்தனர்.

இதனை அடுத்து கிருஷ்ண காந்த வீட்டிற்கு சென்ற தனிப்படை போலீசார் மேற்கொண்ட சோதனையில் வீட்டில் விற்பனைக்காகப் பதிக்க வைக்கப்பட்டிருந்த 4 கிலோ கஞ்சா 600 போதை மாத்திரைகளைக் கைப்பற்றிக் கிருஷ்ணகாந்த் ஹரிஷ், ஆனந்த் ஆகிய மூன்று பேரைக் கைது செய்தனர் தொடர்ந்து மாத்திரைகள் மற்றும் கஞ்சா எங்கிருந்து வாங்கப்பட்டது எப்படி விற்பனை செய்கின்றனர், வேறு யாருக்காவது உடந்தை இருக்கின்றதா உள்ளிட்ட பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *