
ஆண்டுதோறும் கோடை காலம் வந்து விட்டாலே அதனின் வெப்பத்தை பொறுத்து கொள்ள முடியமால் நாமும் பல வகையான குளிர்ச்சி தரும் பொருட்களை நமது உணவில் சேர்த்து கொள்வோம். அப்படி நாம் நமது உடலின் குளிர்ச்சியை அதிகரிப்பதற்காக அடிக்கடி சேர்த்து கொள்ளும் உணவுகளில் இந்தச் சர்பத் வகைகளும் ஒன்று ஆகும்.
அப்படி நாம் பல வகையான சர்பத்துகளை பருகி இருப்போம். ஆனால் நம்மில் பலரும் பருகி இருக்காத கோடை கால ஸ்பெஷல் நொங்கு சர்பத் எப்படி செய்வது என்பதை விரிவாகப் பார்க்கலாம். கோடை கால ஸ்பெஷல் நொங்கு சர்பத் வீட்டிலேயே செய்வது எப்படி என்பதை பற்றித் தான் இங்கு விரிவாகப் பார்க்கலாம்.
சர்பத் தயாரிக்க தேவையானபொருட்கள்:
நொங்கு – 5
எலுமிச்சை பழச்சாறு – 1 டீஸ்பூன்
சர்க்கரை – 2 டேபிள் ஸ்பூன்
சர்பத் சாறு – 2 டேபிள் ஸ்பூன்
சப்ஜா விதைகள் – 1 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் – தேவையான அளவு

செய்முறை:
முதலில் ஒரு கிண்ணத்தை எடுத்து அதில் நாம் எடுத்து வைத்துள்ள 1 டேபிள் ஸ்பூன் சப்ஜா விதைககளை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு ஊறவிடுங்கள்.
பின்னர் நாம் எடுத்து வைத்துள்ள 5 நொங்கினை எடுத்து அதன் உள்ளே உள்ள தண்ணீரை ஒரு கிண்ணத்தில் ஊற்றிக் கொள்ளுங்கள். பிறகு அதனுடைய தோல்களை நீக்கி விட்டு அதனைச் சிறிய சிறிய துண்டுகளை நறுக்கி கொள்ளுங்கள்.
பிறகு ஒரு மிக்சி ஜாரை எடுத்து அதில் நாம் நறுக்கி வைத்துள்ள நொங்கு மற்றும் நொங்கிலிருந்து எடுத்து வைத்திருந்த தண்ணீரையும் சேர்த்து லேசாக அரைத்துக் கொள்ளுங்கள்.

பின்னர் அதனை ஒரு கிண்ணத்தில் சேர்த்து அதனுடன் 1 டீஸ்பூன் எலுமிச்சை பழச்சாறு, 2 டேபிள் ஸ்பூன் சர்க்கரை, 2 டேபிள் ஸ்பூன் சர்பத் சாறு, தேவையான அளவு தண்ணீர் மற்றும் நாம் முன்னரே ஊற வைத்திருந்த 1 டேபிள் ஸ்பூன் சப்ஜா விதைகள் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள். பின்னர் நொங்கு சர்பத்தை சுவைக்கலாம்.

