Modi: தொலை பேசி வாயிலாக நலம் விசாரிப்பு!

Advertisements

உத்தரகண்ட்  சுரங்கத்தில் சிக்கி மருத்துவமனையில்  சிகிச்சை பெற்றுவரும் 41 தொழிலாளர்களுடன் தொலை பேசி வாயிலாகப் பிரதமர் மோடி உடல் நலம் குறித்து விசாரித்தார்.

உத்தர்காசி: உத்தரகண்டில் சுரங்கத்தில் சிக்கிய 41 தொழிலாளர்கள் நேற்று இரவு பத்திரமாக மீட்கப்பட்டனர். அவர்களுக்கு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்து வரப்படும் நிலையில், பிரதமர் மோடி 41 தொழிலாளர்களுடன் தொலை பேசி வாயிலாகப் பேச ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அவர்களுடன் பேசிய பிரதமர் மோடி, உத்தரகாசியில் மீட்புப் பணியின் வெற்றி அனைவரையும் உணர்ச்சிவசப்பட வைக்கிறது.

17 நாட்கள் சுரங்கத்தில் சிக்கியிருந்த போதும், உங்களின் தைரியமும், பொறுமையும் அனைவரையும் ஊக்குவிக்கிறது. நீங்கள் அனைவரும் நலமாகவும், நல்ல ஆரோக்கியத்துடனும் வாழ்த்துகிறேன் என்றார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *