Haryana, J&K Election Result LIVE: காங்கிரஸ் கூட்டணி முன்னிலை!பாஜகவுக்கு பின்னடைவு!

ஜம்மு காஷ்மீரில் மொத்தம் உள்ள 90 தொகுதிகளில், காங்கிரஸ் கூட்டணி 43 தொகுதிகளிலும், பா.ஜ., 29 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன.

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தலில், பதிவான ஓட்டுக்களை எண்ணும் பணி இன்று(அக்., 08) காலை 8 மணிக்குத் துவங்கி நடந்து வருகிறது. காலை 9.30 மணி நிலவரப்படி, ஜம்மு காஷ்மீரில் மொத்தம் உள்ள 90 தொகுதிகளில், காங்கிரஸ் கூட்டணி 52 தொகுதிகளிலும், பா.ஜ., 24 தொகுதிகளிலும், மக்கள் ஜனநாயக கட்சி 2 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.

ஜம்மு காஷ்மீரில், மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கு 3 கட்டங்களாக, செப்.,18, 25 மற்றும் அக்.,1ம் தேதிகளில் ஓட்டுப்பதிவு நடந்தது. 3 கட்டங்களிலும் சேர்த்து 63.88 சதவீத ஓட்டுக்கள் பதிவாகின. காங்கிரஸ், தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணியாகவும், பா.ஜ., மக்கள் ஜனநாயக கட்சி ஆகியவை தனித்தும் களம் இறங்கின.

மொத்தம் 873 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில், தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் உமர் அப்துல்லா, காங்கிரஸ் தலைவர் தாரிக் ஹமீத், பா.ஜ., தலைவர் ரவீந்திர ரெய்னா உள்ளிட்டோர் முக்கிய வேட்பாளர்கள். தேர்தலில் பதிவான ஓட்டுக்களை 20 மையங்களில் எண்ணும் பணி, இன்று காலை 8 மணிக்குத் துவங்கியது.

காலை 9.30 மணி முன்னிலை நிலவரம் (மொத்தம் 90 தொகுதிகள்)

காங்., தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணி- 52

பா.ஜ.,- 24,

மக்கள் ஜனநாயக கட்சி (பி.டி.பி) – 2,

மற்றவை- 12,

ஓட்டு எண்ணும் பணி நடக்கும் இடங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *