
சந்திரபாபு நாயுடுவின் கடிதம்… சிறையில் இருந்து கொண்டே மக்களுக்காக உருக்கமாக கடிதம் எழுதியுள்ளதாக அவரது கட்சி தொண்டர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆந்திரா ராஜமுந்திரி சிறையில் இருக்கும் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு தன் கட்சித் தொண்டர்களுக்கு பொது மக்களுக்கும் உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அக் கடிதத்தில் மாநிலத்தின் முன்னேற்றத்தில் முக்கிய பங்காற்றியுள்ளேன். மக்கள் நலன் என்றால் என் பெயர் தான். நான் என்றால் மக்கள் நலன் என்று பொருளாகும். உண்மை நிச்சயம் ஒரு நாள் வெளிவரும். என்னுடைய கைது சட்டவிரோதமானது. பழிவாங்கும் நடவடிக்கை என்று தெரிவித்துள்ளார்.
நாற்பது நாள் சிறைவாசத்தில் உளவியல் ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பட்ட துயரங்களை விவரித்துள்ளார். அவரது கடிதம் அவரின் உள்ளத்தின் தாக்கத்தை வெளிப்படுத்தியது. தசரா நேரத்தில் மக்களுக்கு கடிதம் எழுதுவதன் மூலம் தான் சிறையில் இருப்பதை நினைவு படுத்தியுள்ளனர். சந்திரபாபு நாயுடு இல்லையேல் தெலுங்கு தேச கட்சி இல்லை. சட்டபூர்வமாக எதிர்கொள்ள தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளார்.
நான் வெளியில் இல்லை. சிறையில் இருந்தாலும் மக்கள் மனதில் என்றும் வாழ்ந்து வருகிறேன் என்று தெரிவித்தார். பொதுவாக அரசியல் தலைவர்கள், சிறைவாசம் அனுபவிக்கும் போது புத்தகங்கள், சுயசரிதை எழுதுவது போல இவரும் 40 நாட்களில் தன் மன ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.



