
ககன்யான் திட்டத்தில் பெண் விஞ்ஞானிகள் அல்லது பெண் போர் விமானிகளைப் பயன்படுத்தத் திட்டமிட்டுளதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறியுள்ளார்.
திருவனந்தபுரம்: மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் (Gaganyaan) ககன்யான் திட்டத்துக்கான சோதனை முயற்சி நேற்று முன்தினம் நடத்தப்பட்டது.இந்நிலையில், இஸ்ரோ தலைவர் சோம்நாத் நேற்று கூறியதாவது:
ககன்யான் திட்டத்தில் பெண் விஞ்ஞானிகள் அல்லது பெண் போர் விமானிகளைப் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளோம். முதற்கட்டமாக அடுத்த ஆண்டுப் பெண் வடிவிலான மனித ரோபோட்டை அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்குச் சாத்தியமான பெண் விஞ்ஞானிகளைத் தேர்வு செய்யும் பணிகள் நடந்து வருகின்றன. வரும் 2035க்குள் முழுமையாகச் செயல்படும் விண்வெளி நிலையத்தை அமைப்பதே இஸ்ரோவின் இலக்கு.இவ்வாறு அவர் கூறினார்.


