
மியான்மரில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் குழந்தைகள் உட்பட 45 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
மியான்மரின் ஷான் மாநிலம், நாம்காம் நகரில் உள்ள கங்ட்அப் கிராமம் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்தக் கிராமத்தில் உள்ள ஒரு கட்டிடத்தில் சுரங்கப் பணிகளுக்காகச் சேமித்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் திடீரென வெடித்துச் சிதறின. இதில், அந்த வெடிபொருள் கிடங்கும் அதன் அருகே இருந்த குடியிருப்புகளும் இடிந்து விழுந்தன.
இந்த விபத்தில் குழந்தைகள் உட்பட 45 பேர் உயிரிழந்தனர். மேலும், 70 பேர் படுகாயமடைந்தனர். இதுகுறித்து, தகவலறிந்து விரைந்து வந்த மீட்புக்குழுவினர், காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.


