குப்பையில் கிடந்த ஹாரி பாட்டர் புத்தகம்!

Advertisements

இங்கிலாந்து:

1997ஆம் ஆண்டு ஜே.கே.ரவுலிங் எழுதிய ‘ஹாரி பாட்டர் அண்ட் தி ஃபிலாசஃபர்ஸ் ஸ்டோன்’ புத்தகம் வெளியானது.

இந்தப் புத்தகம் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றதையடுத்து தொடர்ந்து அடுத்தடுத்த பாகங்களை எழுதினார் ரவுலிங்.

இதனையடுத்து ஹாரி பாட்டர் புத்தகங்களை அடிப்படையாகக் கொண்டு திரைப்படங்களும் வெளியாகிப் பெரும் வரவேற்பைப் பெற்றன.

இந்த நிலையில், குப்பையிலிருந்து கண்டெடுக்கப்பட்ட ஹாரி பாட்டர் நாவலின் முதல் பதிப்புப் புத்தகம் சுமார் ரூ.22 லட்சத்திற்கு ஏலம் போய் உள்ளது. ஆன்லைன் மூலம் கடந்த சனிக்கிழமை ஏலம் நடைபெற்று உள்ளது.

ஏலம் நடத்தும் டேனியல் பியர்ஸ் என்பவர், உயிரிழந்த ஒருவரின் உடைமைகளுடன் இப்புத்தகத்தைக் கண்டெடுத்துள்ளார்.

500 புத்தகங்களே அச்சிடப்பட்டது என்றும் பொது நூலகங்களுக்கு விநியோகிக்கப்பட்ட 300 பிரதிகளில் ஒன்று இது என்றும் கூறப்படுகிறது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *