Frank Rubio: தவறுதலாகச் சிக்கிய விண்வெளி வீரர்கள் பூமிக்கு திரும்பினர்!

Advertisements

விண்வெளியில் 371 நாள் தவறுதலாகச் சிக்கிய விண்வெளி வீரர்கள் பூமிக்கு திரும்பினர்.

விண்வெளிக்குச் சென்ற அமெரிக்க விண்கலன் பழுதடைந்ததால் விண்வெளி வீரர்கள் மூன்று பேர் 371 நாள் நடுவானத்தில் சிக்கிக் கொண்டார்கள்.
விண்வெளியை ஆராய்வதற்காகக் கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21ஆம் தேதி ஒரு விண்கலனை அமெரிக்கா அனுப்பியது இந்த விண்கலனில் மூன்று அமெரிக்க விஞ்ஞானிகளும் பயணம் மேற்கொண்டனர். இவர்களில் முக்கியமானவர் பிராங்க் ரூபியோ என்பவர் ஆவார். விண்வெளிக்குச் சென்ற அந்த விண்கலன் மூன்று விஞ்ஞானிகளையும் தரையிறக்கிய நிலையில் திடீரென வழுதடைந்தது.
இதனையடுத்து அமெரிக்க விஞ்ஞான கூடம் அந்த விண்வெளி கலனைமட்டும் பூமிக்கு திரும்ப அழைத்தது. இதனால் விஞ்ஞானிகள் அங்கேயே சிக்கி கொண்டனர். சற்றும் எதிர்பாராத இந்த நிகழ்வால் திட்டமிட்ட காலத்தைவிட இரண்டு மடங்கு கூடுதலாக அந்த விஞ்ஞானிகள் விண்வெளியில் தங்கும் நிலைமை ஏற்பட்டது. அவர்களுக்கு உதவி செய்வதற்காக அமெரிக்க விண்வெளி கூடம் மற்றொரு விண்கலனை கடந்த பிப்ரவரி மாதம் அனுப்பியது
இதனை அடுத்து புதிய விண்கலன் மூலமாக அந்த மூன்று விஞ்ஞானிகளும் பூமிக்கு திரும்புவதற்கு ஏற்பாடுகள் நடைபெற்றன. இந்த நிலையில் கடந்த 21ஆம் தேதி மூன்று விஞ்ஞானிகளும்  புதிய விண்கலன் மூலமாகப் பூமிக்கு திரும்பினர் கஜகஸ்தானில் வந்திறங்கிய அந்த விண்கலன் மூலம் மூன்று விஞ்ஞானிகளும் உயிர் தப்பினர்.
371 நாட்கள் அவர்கள் விண்வெளியில் இருந்ததால் நடக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டனர் அவர்களைத் தூக்கி சுமந்த நிலையில் தீவிர சிகிச்சை அளித்துத் தற்போது நலமாக இருக்கிறார்கள். விண்வெளியில் ஓராண்டுக்கும் மேலாக 371 நாட்கள் குடியிருந்ததன் மூலம் மூன்று விஞ்ஞானிகளும் புதிய உலக சாதனை படைத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *