Mutton Paya Recipe: பரோட்டாவுக்கு  ருசியான ஆட்டுக்கால் பாயா!

Advertisements

ஆட்டுக்கால் பாயா ஒரு வகை சூப் வகை. மிகவும் திக்காக இல்லாமல் சிறிது தண்ணீராக இருக்கும்.

உடலுக்கு மிகவும் சத்தானது சூப். மிளகு கொத்தமல்லி தழை சேர்த்து குடிக்க ஏற்றது. மழைக் காலத்துக்கு மிகவும் உகந்தது என்றே கூறலாம். மிகவும் ருசியாக இருக்கும். அதன் மணம் இருக்கே நாலு வீடு வரை வீசும்.

தேவையான பொருட்கள்;

ஆட்டுக்கால் – 2
தக்காளி – 4

வெங்காயம் – 2
மிளகாய்த்தூள் – 1
ஸ்பூன் தனியாத்தூள் – 1
ஸ்பூன் மஞ்சள் தூள் – 1/2
ஸ்பூன் பச்சை மிளகாய் – 3
– 4 ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது – 4 ஸ்பூன்
தேங்காய்ப்பால் – 2 கப்
உப்பு – தேவையான அளவு


செய்முறை:

ஆட்டுக்காலை நன்கு சுத்தம் செய்து கொள்ளவும்.
வெங்காயம், தக்காளி, மிளகாய் ஆகியவற்றை நறுக்கிக் கொள்ளவும்.
பின் தேங்காய் பால் எடுத்துக் கொள்ளவும்.
பின் குக்கரில் ஆட்டுக்கால், வெங்காயம், தக்காளி, மிளகாய் ஆகியவற்றைப் போட்டு வதக்கவும்.
அதன் பிறகு மஞ்சள் தூள், தனியாத்தூள், மிளகாய்த்தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேக விடவும்.
10 விசில் கழித்து கால் வெந்ததா என்று பார்த்தப் பிறகு தேங்காய்ப்பாலை ஊற்றி கொதிக்கவிட்டு இறக்கவும்.
பாயாவை இறக்கும் முன் மிளகுத்தூள் சேர்த்து இறக்கவும்.
இதோ சுவையான பெப்பர் பாயா தயார்.
இந்த பாயாவை அப்படியே டம்பளரில் ஊற்றி குடிக்கலாம்.
பரோட்டா தோசைக்கு தொட்டு சாப்பிடலாம்.
பாயாவில் உள்ள நல்லி எலும்பு சாறு மிகவும் ருசியாக இருக்கும்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *