
சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்த பிரபல ரவுடி லொட்டை (எ) ஆனந்த். இவர்மீது கொலை, கொள்ளை உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது.
சென்னையில் மனைவி கடைக்குச் சென்று முட்டை வாங்கி வருவதற்குள் 8 பேர் கொண்ட கும்பலால் பிரபல ரவுடி கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்த பிரபல ரவுடி லொட்டை (எ) ஆனந்த். இவர்மீது கொலை, கொள்ளை உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் நேற்று இரவு மனைவியிடம் ரவுடி ஆனந்த் முட்டை தோசை கேட்டுள்ளார். கணவர் முட்டை தோசை கேட்டதை அடுத்து கடைக்குச் சென்று முட்டை வாங்கி வர மனைவி சென்றுள்ளார். இதைத் தங்களுக்கு சாதமாகப் பயன்படுத்திக்கொண்ட 8 பேர் கொண்ட ரவுடி கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் வீட்டிக்குள் புகுந்து ஆனந்தை சுத்துப்போட்டு சரமாரியாக வெட்டியுள்ளனர்.
இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த ரவுடி ஆனந்த் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனையடுத்து அந்தக் கும்பல் அங்கிருந்துது தப்பியது. கடைக்குச் சென்ற மனைவி வீட்டுக்கு வந்து பார்த்தபோது கணவர் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்து அலறிக் கூச்சலிட்டார். இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ஆனந்த் உடலைக் கைப்பற்றிப் பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
இந்தக் கொலை சம்பவம் தொடர்பாகப் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் முன்விரோதம் காரணமாக இந்தக் கொலை நடைபெற்றிக்கலாமெனக் கூறப்பட்டுகிறது. மேலும், தலைமைறைவாக உள்ள குற்றவாளிகளைப் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

