Today Gold Rate In Chennai: 4 நாட்களுக்கு பிறகு மீண்டும் ஜெட் வேகத்தில் எகிறும் தங்கம் விலை!

தமிழ்நாட்டில் தங்கத்தின் மீதான மோகம் அதிகம். நான்கு நாட்களாக விலையில் எந்த மாற்றமும் இல்லாத நிலையில் இன்று தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது.

தங்கம் பெண்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. இது அனைவரும் அறிந்தது. குறிப்பாக தென் இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலை வகிப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் தமிழ்நாட்டு பெண்களின் தங்க நகைகள் மீதான மோகம் மிகவும் அதிகம் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. இந்நிலையில், நான்கு நாட்களாக தங்கம் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல நிலையில் இன்று உயர்ந்துள்ளது.

நேற்றைய நிலவரப்படி தங்கம் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் ஒரே விலையில் நீடித்தது. சவரன் ரூ.53,560-க்கு விற்பனையானது. அதேபோல், தங்கம் கிராம் ரூ.6,695-க்கு விற்பனையானது.

இன்றைய (ஆகஸ்ட் 28) நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.53,720-ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.6,715-ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ. 7,170-ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் சவரன் ரூ.57,360-ஆக விற்பனையாகிறது.

வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் நேற்றைய விலையே நீடிக்கிறது. கிராம் வெள்ளி ரூ.93.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளி ரூ.93,500-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *