காமன்வெல்த் போட்டியில், ஆண்களுக்கான நீளம் தாண்டுதலில் வெள்ளிப் பதக்கம் வென்ற முரளி ஸ்ரீசங்கருக்குத் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தனது சமூக வலைத்தளத்தில் வாழ்த்துச் செய்தி ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், 2026 கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டியில், ஆண்களுக்கான நீளம் தாண்டுதலில் வெள்ளிப் பதக்கம் வென்ற முரளி ஸ்ரீசங்கருக்குத் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து இரண்டாவது முறையாகக் காமன்வெல்த் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வெல்வது நாட்டையே பெருமைப்படுத்தக்கூடிய ஒரு மாபெரும் சாதனையாகும் என்று புகழாரம் சூட்டியுள்ளார்.
நீங்கள் தொடர்ந்து பல வெற்றிகளைக் குவிக்கவும், சிறந்த சாதனைகளைப் படைக்கவும் வாழ்த்துவதாகத் தெரிவித்துள்ளார்.


