Mrunal Thakur: மார்டன் கவுனில் ரசிகர்களுக்கு விருந்து!

Advertisements

நடிகை மிருணால் தாக்கூரின் லேட்டஸ் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

பிரபல நடிகை மிருணால் தாக்கூர் 2012 இல் முஜ்சே குச் கெஹ்தி…யே காமோஷியான் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியின்ன் தனது திரை வாழ்க்கையை தொடங்கினார்.

அதன் பின்னர் குங்குமம் பாக்யா தொலைக்காட்சி தொடரில் நடித்தபோது தனது நடிப்பு திறமையால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார் மிருணால் தாக்கூர்.  பின்னர் 2018ல் லவ் சோனியா என்ற ஹிந்தி திரைப்படத்தில் மிருணால் தாக்கூர் ஹீரோயினாக அறிமுகமானார்.

அடுத்த சில ஆண்டுகளில், மிருணால் தாக்கூர் பாலிவுட்டில் ஒரு முன்னணி நடிகையாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். அவர் நடித்த சூப்பர் 30 மற்றும் பாட்லா ஹவுஸ் போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன.
 Mrunal Thakur

இதை தொடர்ந்து அவர் நடித்த சில படங்கள் வணிக ரீதியில் தோல்வி அடைந்தாலும், கடந்த ஆண்டு வெளியான சீதா ராமம் அவருக்கு திருப்புமுனையை ஏற்படுத்திய படமாக மாறியது. தனது நேர்த்தியான நடிப்பின் மூலமும் வசீகரத்தின் மூலமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

சீதாராமம் படத்தை தொடர்ந்து ஹிந்தி மற்றும் தெலுங்கு சினிமாவில் பிசியான நடிகையாக வலம் வருகிறார். லஸ்ட் ஸ்டோரிஸ் 2, பிப்பா உள்ளிட்ட ஹிந்தி படங்களில் நடித்தார். தொடர்ந்து தெலுங்கில் நானிக்கு ஜோடியாக மிருணால் நடித்த Hi Nanna படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

தற்போது பேமிலி ஸ்டார் என்ற தெலுங்கு படத்திலும், பூஜா மேரி ஜான் என்ற ஹிந்தி படத்திலும் மிருணால் தாக்கூர் நடித்து வருகிறார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர் அவ்வப்போது தனது போட்டோஷூட் தொடர்பான புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது மார்டன் கவுனில் அவர் வெளியிட்ட கிளாமர் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *