தமிழகத்தின் செல்லப்பிள்ளை தோனி..! ஸ்டாலின் வெளியிட்ட உருக்கமான பதிவு..!

கத்தின் செல்லபிள்ளை தோனிக்கு, பிரியாவிடை தர இன்னொரு வாய்ப்பு கிடைத்திருக்கலாம் என்றும், அற்புதமான வெற்றிக்கும் நிலைத்திருக்கும் அன்பிற்கும் நன்றி என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக எம்.எஸ்.தோனி தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2027 ஐபிஎல் சீசனுக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆலோசகராக தோனி செயல்படுவார் என்பதை அந்த அணி நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றது முதல், அடுத்த தலைமுறை சூப்பர் கிங்ஸ் வீரர்களுக்கு வழிகாட்டுவது வரை, தல எப்போதும் நமது அடையாளத்தின் ஓர் அங்கமாகவே இருப்பார் என்று சி.எஸ்.கே. உருக்கமாக பதிவிட்டுள்ளது.

மகேந்திர சிங் தோனி ஐபிஎல் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாகவும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆலோசகராகப் புதிய பொறுப்பேற்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மற்றும் எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் நெகிழ்ச்சியான வாழ்த்துப் பதிவை வெளியிட்டுள்ளனர்.

அதில், எண்ணற்ற மகிழ்ச்சியான தருணங்களுக்கும், அற்புதமான வெற்றிகளுக்கும், என்றும் நிலைத்திருக்கும் தோனிக்கு முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.  மேலும், சி.எஸ்.கே. அணியின் ஆலோசகராகத் தொடங்கும் உங்கள் புதிய பயணத்திற்கு மனமார்ந்த வாழ்த்துகள் என்றும் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதேபோன்று, சி.எஸ்.கே. அணியின் ஆலோசகராக புதிய பயணத்தைத் தொடங்கும் தோனிக்கு எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *