ஆசியான் 2045 – இந்தியா 2047..! மோடியின் தொலைநோக்குத் திட்டம்..!

ஆசியான் சமூகத்தின் 2045 தொலைநோக்கு திட்டம் மற்றும் விக்சித் பாரத் 2047 ஆகிய நம்முடைய இரு திட்டங்களும், நம்முடைய பகிரப்பட்ட நோக்கங்களை மெய்யாக்க நமக்கு உதவும் என்று பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்தார்.

ஆசியான் அமைப்பு நடத்தும் 23-வது ஆசியான்-இந்தியா மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றுள்ளார். இந்த ஆண்டுக்கான ஆசியானின் தலைமை பொறுப்பை பிலிப்பைன்ஸ் ஏற்றுள்ள நிலையில், அதன் தலைநகர் மணிலாவில் ஆசியான் மாநாடு இன்று நடைபெற்றது.

பிலிப்பைன்ஸ் அதிபர் பெர்டினாண்ட் ஆர் மார்கோஸ்-ஜூனியரின் அழைப்பை ஏற்று பிரதமர் நரேந்திரமோடி பிலிப்பைன்ஸ் சென்றார். இந்த மாநாட்டில் பங்கேற்க வருகை தரும் தலைவர்களுக்காக, பிலிப்பைன் சர்வதேச பாரம்பரிய மையத்தில் நேற்றிரவு விருந்து நடைபெற்றது.

இதனை முன்னிட்டு பிலிப்பைன்சின் பாரம்பரிய உடையை அணிந்து பிரதமர் நரேந்திரமோடி, இரவு விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்றார். இந்த பயணத்தின்போது, மணிலா சர்வதேச விமான நிலையத்தில், இந்திய வம்சாவளியினரை நேரில் சந்தித்து, உரையாடினார்.

அவர்களுடன் கைகுலுக்கி அவர்களுக்கு தன்னுடைய வாழ்த்துகளையும் தெரிவித்து கொண்டார். அதன்பின்னர் நடந்த பாரம்பரிய நடன நிகழ்ச்சியை கண்டு களித்ததுடன், ராமாயண மேடை நிகழ்ச்சியிலும் அவர் கலந்து கொண்டார். அதனுடன், பிலிப்பினோ மற்றும் இந்திய வம்சாவளி மாணவர்களின் பூர்ண கும்ப சுலோகங்களின் வாசிப்பையும் அவர் அமைதியாக கேட்டு கொண்டார்.

இதனையடுத்து, ஆசியான் மாநாட்டில்,  பிரதமர் நரேந்திரமோடி உரையாற்றினார். அப்போது, அனைத்தும் உள்ளடக்கிய மற்றும் விதிகள் அடிப்படையிலான இந்தோ-பசிபிக்கில், இந்தியா நம்பிக்கை கொண்டுள்ளது என்றும், இந்தோ-பசிபிக்கின் வருங்காலம், போட்டியில்லாமல், ஒத்துழைப்பிலேயே உள்ளது என்றும் பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *