Morocco Earthquake: 632 பேர் உயிரிழந்த பரிதாபம்!

Advertisements

மொரோக்கா நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் 600க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 300க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்…

மொரோக்கா நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் 600க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 300க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

வட ஆப்பிரிக்கா நாடானா மொரோக்கோவில் இன்று அதிகாலையில் 6.8 ரிக்டர் அளவுகோலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மராகேஷுக்கு தென்மேற்கே 71 கிலோ மீட்டர் (44 மைல்) தொலைவில் உள்ள ஹை அட்லஸ் மலைகளின் 18.5 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. உள்ளூர் நேரப்படி 23.11 (இந்திய நேரப்படி இரவு 11.11) மணிக்குநிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் தொடர்ந்து 6 முறை ஏற்பட்டதாகத் தெரிகிறது. 19 நிமிடங்கள் தீவிரதன்மையுடன் இருந்த நிலநடுக்கம் அதற்குப் பிறகு 4.9 ரிக்டர் அளவில் பதிவாகி உள்ளது.

இதனால் பதற்றம் அடைந்த மக்கள் நள்ளிரவில் வீட்டை விட்ட வெளியே பொது இடங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். அதுமட்டும் வீடுகள், கட்டடங்கள் இடிந்து விழுந்துள்ள நிலையில் அதில் ஏராளமான பொதுமக்கள் சிக்கியுள்ளனர். மேலும், மொரோக்கோவில் உள்ள பழை மதீனா பகுதியும் சேதம் அடைந்துள்ளது.

இது சம்பவந்தமான வீடியோக்களும் இணையத்தில் வெளியாகிப் பார்ப்போரை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. இந்த மோசமான நிலநடுக்கத்தால் இதுவரை 632 பேர் உயிரிழந்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளது. மேலும், இடிபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்த 300க்கும் மேற்பட்டாருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலநடுக்கம் சம்பந்தமான வீடியோக்களும் இணையத்தில் வெளியாகிப் பார்ப்போரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *