நாசா யுரேனஸ் கிரகத்தில் புதிய நிலா கண்டுபிடிப்பு .!

கனடா நாட்டின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்துடன், அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிலையமும், நாசாவும் இணைந்து யுரேனஸ் கிரகத்தில் புதிய நிலாவை கண்டுபிடித்துள்ளனர்.

கனடா நாட்டின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்துடன்,அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிலையம் நாசாவும் இணைந்து அதிநவீன சக்தி வாய்ந்த ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியை உருவாக்கி விண்ணில் நிலைநிறுத்தியுள்ளனர்.

இதில், பால்வெளி மண்டலத்தில் ஏழாவது கிரகமாக யுரேனசை ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி ஆராய்ந்துள்ளது. இந்நிலையில், யுரேனஸ் கிரகத்தை மேலும் ஒரு நிலா சுற்றி வருவதை கண்டுபிடித்துள்ளனர்.

இதனால், யுரேனஸ் நிலாக்களின் எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளது. மேலும், புதிய நிலாவுக்கு நாசா சார்பில் இன்னும் பெயர் வைக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *