மோடியின் கோரிக்கையை ஏற்ற இலங்கை அதிபர்!

Advertisements

இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கை பயணத்தின்போது தமிழக மீனவர்கள் பிரச்சனை பற்றி இலங்கை அதிபர் அநுரகுமார திசநாயக்கேவிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.இந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து தமிழக மீனவர்களுக்கு இன்ப செய்தி கிடைத்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடிக்கு தாய்லாந்தில் நடந்த மாநாட்டை முடித்து கொண்டு நேராக இலங்கை சென்றார். இலங்கை தலைநகர் கொழும்புவில் இறங்கிய பிரதமர் மோடிக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து  பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இலங்கை அதிபர் அநுரகுமார திசநாயக்கே ஆகியோர் சந்தித்து விரிவாக பேச்சுவார்த்தை நடத்தினர்.

இருநாடுகள் இடையேயான உறவை மேம்படுத்துவது தொடர்பாகவும், இருநாடுகள் இடையேயான 7 முக்கிய ஒப்பந்தங்களும் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி இந்தியா – இலங்கை இடையே பாதுகாப்பு துறை, எரிசக்தி, டிஜிட்டல் துறை, சுகாதாரம் மற்றும் வணிக துறை சார்ந்து 7 புரிந்துணர்வு ஒப்பந்தம்  மேற்கொள்ளப்பட்டது.இலங்கை அதிபர் அநுரகுமார திசநாயக்கே மித்ரா விபூஷனா என்ற விருதை இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடியின் இந்த பயணம் என்பது தமிழகத்தை பொறுத்தவரை மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது. ஏனென்றால் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி நம் மாநில மீனவர்களை அடிக்கடி இலங்கை கடற்படையினர் பிடித்துச் செல்கின்றனர். அதோடு அவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்கின்றன.

இதனால் மீனவர்களின் பிரச்சனைகளுக்கு பிரதமர் மோடி தீர்வு காண வேண்டும் என்று தமிழகத்திலிருந்து  தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டது. அதோடு இலங்கையிடம் உள்ள கச்சத்தீவை மீண்டும் இந்தியா கைப்பற்ற வேண்டும். பிரதமர் மோடி அதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று தமிழக முதல்வர் முதல்வர் மு.க ஸ்டாலின் உள்பட எதிர்க்கட்சி தலைவர்கள் கோரிக்கை வைத்திருந்தனர். இந்திய  பிரதமர் மோடி – இலங்கை அதிபர் அநுரகுமார திசநாயக்கே ஆகியோர் இடையே தமிழக  மீனவர்கள் பிரச்சனை பற்றி விரிவாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.  அப்போது பிரதமர் மோடி, ‛‛தமிழ்நாடு உள்பட இந்திய மீனவர்கள் பிரச்சனையில் மனிதாபிமானத்துடன் இலங்கை செயல்பட வேண்டும். இந்த விவகாரத்தில்  இலங்கையின் செயல்பாடு சரியாக இருக்க வேண்டும். கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க வேண்டும்” என்று பிரதமர் மோடி  வலியுறுத்தி கேட்டுக்கொண்டார்.

இந்திய பிரதமர் மோடியின் இந்த கோரிக்கையை இலங்கை அதிபர் அநுரகுமார திசநாயக்கே  முழு மனதுடன் ஒப்புக்கொண்டார். இந்திய மீனவர்களையும், படகுகளையும் உடனடியாக விடுவிப்பதாக அவர் உறுதியளித்தார். இது தமிழக மீனவர்களுக்கு  இன்ப செய்தியாக  பார்க்கப்படுகிறது. ஏனென்றால் இலங்கையின் பிடியில் நம் மீனவர்களும், படகுகள் உள்ளது. பிரதமர் மோடியின் இந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து மீனவர்கள் அனைவரும்  விடுவிக்கப்பட உள்ளனர்.குறிப்பாக இந்திய பிரதமர் மோடியின்  இலங்கை பயணத்தால் கச்சத்தீவு மீட்கப்பட வேண்டும்,  தமிழக மீனவர்கள் கடலில்  மீன் பிடிக்கும் போது இலங்கை கடற்படையால்  கைது செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்படுவது தடுக்கப்படவேண்டும்,  மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவது நிறுத்தப்படவேண்டும்.

துப்பாக்கி சூடு நடத்தி கொல்லப்படுவதை நிரந்தரமாக நிறுத்த வேண்டும்,  படகுகள் உள்ளிட்ட தமிழக மீனவர்களின் உடமைகளை கைப்பற்றுவதோடு சேதப்படுத்துவது இனிவரும் காலங்களில் நடக்காமல் பார்த்துக்கொள்ளவேண்டும், தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை இலங்கை  இராணுவம்  தொடர்ந்து பல ஆண்டுகளாக அழித்துவருதற்கு நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைக்க மத்திய பாஜக அரசு கொடுக்க வேண்டிய அனைத்து அழுத்தங்களையும் கண்டனத்தையும் தெரிவிக்க வேண்டும்  என்பதே பல லட்சம்  தமிழக  மீனவர்களின் பல ஆண்டுகால  கோரிக்கையாக உள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *