TN Assembly2024:கடும் அமளி- அதிமுகவினர் குண்டுக்கட்டாக வெளியேற்றம்!

சென்னை:தமிழக சட்டசபை இரண்டாவது நாள் அமர்வு கூடியது. கேள்வி நேரம் தொடங்கும் முன் அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். மானிய கோரிக்கையைத் தவிர்த்துவிட்டு கள்ளச்சாராய விவகாரத்தை விவாதிக்க அ.தி.மு.க.வினர் கோரிக்கை விடுத்தனர்.

மேலும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவி விலகக் கோரி எழுதிய காகிதங்களைத் தூக்கி காண்பித்து இருக்கையை முற்றுகையிட்டதால் சபாநாயகர் அப்பாவு கண்டித்தார். அமளியில் ஈடுபட வேண்டாம் என்றும் அமைதியாக இருக்குமாறும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு சபாநாயர் அப்பாவு அறிவுறுத்தினார்.

இருப்பினும் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் அ.தி.மு.க.வினர் சட்டசபையிலிருந்து வெளியேற்றுமாறு காவலர்களுக்குச் சபாநாயகர் உத்தரவிட்டார். இதையடுத்து சட்டசபையிலிருந்து அ.தி.மு.க. மற்றும் பாம.க. உறுப்பினர்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டனர்.

முன்னதாக, கள்ளச்சாராய விற்பனையைத் தடுக்க தவறியதாகத் தமிழக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கருப்பு உடை அணிந்து சட்டசபைக்கு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *